Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்கு உறுதுணையாக தணிக்கை வாரியத் தலைவர் - ஆர்டிஐ செல்வம் புகார்

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (13:51 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கில்  ''நா ரெடி'' என்ற பாடல் வெளியானது.

அனிருத் இசையமைப்பில் உருவான இப்பாடலை விஜய் பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால், இப்பாடல் காட்சியிலும், போஸ்டரிலும் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிக்கு விமர்சனம் வலுத்தது. சமூக ஆர்வலர்களும் இதற்கு எதிர்ப்பு  தெரிவித்தனர்.

இளைஞர்களை மதுகுடிக்கவும், புகைப்பிடிக்கவும் தூண்டுவதா என்று  நடிகர் விஜய்க்கு சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் '' லியோ பட முதல் சிங்கில் நா ரெடி  பாடல்  இளைஞர்களை போதைப் பழக்கத்தை தூண்டும் வகையிலும் ரவுடியிசத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதால் விஜய் மற்றும் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று'' சென்னை காவல் ஆணையருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார்.

இந்த புகார் மனு மீது நடவடிக்கை என தெரிகிறது. இந்த  நிலையில், விஜய்க்கு உறுதுணையாக தணிக்கை வாரியத் தலைவர் செயல்படுவதாக  சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் இணையதளம் மூலம்  காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments