Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் மில்லர் படத்தின் தமிழக திரையரங்க விநியோக உரிமை நிலவரம்!

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2024 (07:42 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் தமிழக திரையரங்க விநியோக உரிமை தற்போது விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 25 கோடி ரூபாய்க்கு இந்த உரிமை விற்பனை செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒருத்தர் கூடவே வாழணும்னு கட்டாயம் இல்லை… நடிகர் லிவிங்ஸ்டன் பேச்சு!

நடிகர் நவீன நாடோடிகள்… படம் ஓடவில்லை என்றால் நாயகிதான் பலி – மாளவிகா மோகனன் ஆதங்கம்!

யாஷின் டாக்ஸிக் படம் ட்ராப்பா?... திடீரென வைரலான சோஷியல் மீடியா பதிவுகள்!

இளையராஜா பயோபிக் படத்துக்கு திரைக்கதை எழுதும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்!

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments