Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதோ மீண்டும் மற்றொரு "பிகில்" சர்ப்ரைஸ்! திக்குமுக்காடிப்போன ரசிகர்கள்!

Webdunia
சனி, 22 ஜூன் 2019 (18:02 IST)
தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் தளபதி விஜய் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கூறி வருவதோடு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர். 


 
இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தளபதி 63 படத்தின்  ஃப்ர்ஸ்ட் லுக் , செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி விஜய் ரசிகர்களை திருப்தி படுத்தினர் படக்குழுவினர். இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் தளபதியின் பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்கள் ரசிகர்கள். 
 
மைக்கேல் என்ற பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சி அணிந்தபடி நிற்கும் கால்பந்தாட்ட வீரரான மகன் விஜய் தோற்றமளித்தார். அப்பா விஜய்,  கையில் கத்தி, கழுத்தில் சிலுவை, நெற்றியில் திருநீறு, குங்குமம் என ரெளத்ரமாக நிற்கும் வகையில் இரண்டு கதாபாத்திரங்களில் நடிகர் விஜய்யின் புகைப்படத்துடன் பிகில் என்ற டைட்டிலும் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று வெளியானது.
 
விஜய் பிறந்த நாளில் வெளிவந்த இந்த இரண்டு போஸ்டர்களை  சமூகவலைகளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பிகில் படம் குறித்த சர்ப்ரைஸ் காத்திருப்பதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருந்தார்.
 
இந்நிலையில் தற்போது விஜய் ரசிகர்களுக்கு  கூடுதல் கொண்டாட்டமாக பிகில் திரைப்படகின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி மீண்டும் மூன்றாவது போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை இன்பமழையில் ஆழ்த்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கவர்ச்சித் தூக்கலான ஆடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

சச்சின் ரி ரிலீஸுக்கு வெற்றி விழா… 10 மடங்கு லாபம்- தயாரிப்பாளர் அறிவிப்பு!

விமல் படத்தை இயக்கிய இயக்குனர் திடீர் மறைவு.. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்..!

அஜித்தின் பிறந்தநாளில் ரி ரிலீஸாகும் ‘வீரம்’… இன்று வெளியாகிறது டிரைலர்!

அடுத்த கட்டுரையில்
Show comments