Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஸ்வாசம், பேட்ட, பிகில் படங்களின் பட்ஜெட்-வசூல் குறித்த ஒரு ஒப்பீடு!

Webdunia
வெள்ளி, 8 நவம்பர் 2019 (08:05 IST)
தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டாலும் இந்த தகவலை தயாரிப்பு தரப்பினரோ அல்லது விநியோகிஸ்தர்களோ உறுதி செய்யவில்லை. ஆனால் இந்த படம் இதுவரை உலகம் முழுவதும் 180 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்ததாக கோலிவுட்டில் சிலர் கூறி வருகின்றனர்
 
இந்த நிலையில் இதற்கு முன் வெளிவந்த மாஸ் நடிகர்களின் சில படங்களையும் பிகில் படத்தையும் தற்போது ஒரு ஒப்பீடு செய்வோம். அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் ரூ.90 கோடி பட்ஜெட்டில் தயாராகி தமிழகத்தில் ரூ.145 கோடியும், உலகம் முழுவதும் 206 கோடியும் வசூல் செய்துள்ளது. அதேபோல் அஜித்தின் ’நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரூ.80 கோடி பட்ஜெட்டில் தயாராகி தமிழகத்தில் மட்டும் ரூ.90 கோடியும், உலகம் முழுவதும் 166 கோடியும் வசூலாகியுள்ளது. அதேபோல் ரஜினியின் பேட்ட’ திரைப்படம் ரூ.150 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு தமிழகத்தில் 115 கோடியும், உலகம் முழுவதும் ரூ.210 கோடியும் வசூல் செய்தது
 
இந்த நிலையில் 180 கோடி பட்ஜெட்டில் தயாரான விஜய்யின் பிகில் படம் தமிழகத்தில் 95 கோடியும், உலகம் முழுவதும் 180 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. மாஸ் நடிகர்களின் படங்கள் பிரமாண்டமாக இருந்தாலும் அதிக பட்ஜெட்டில் தயாரானால் அந்த படம் நல்ல வசூலை கொடுத்தாலும் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் எந்தவித லாபத்தையும் கொடுக்காது என்பதும், குறைவான, அளவான பட்ஜெட்டில் எடுக்கும் படங்கள் மட்டுமே லாபத்தை கொடுக்கும் என்பதும் தெளிவாகிறது
 
இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கார்த்தியின் ‘கைதி’ திரைப்படம் ரூ.30 கோடி பட்ஜெட்டில் தயாராகி தற்போது 50 கோடி வசூலை நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் குறைந்த பட்ஜெட்டில் தரமான கதையம்சத்துடன் கூடிய படங்களை தயாரிப்பதே யாரிப்பாளர்களின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments