Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் யார் யார்? இதோ முழுவிபரங்கள்

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (07:20 IST)
தொலைக்காட்சி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சி நேற்று தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 ப்போட்டியாளர்களளயும் நேற்று கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். கிட்டத்தட்ட ஏற்கனவே வெளியான செய்திகளில் இருந்தவர்கள்தான் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு, இலங்கை தமிழ்ப்பெண் லொஸ்லியா, நடிகை சாக்சி அகர்வால், நடிகை மதுமிதா, நடிகர் கவின், நடிகர் சரவணன், நடிகை அபிராமி வெங்கடாச்சலம், நடிகை வனிதா விஜயகுமார், இயக்குனர் மற்றும் நடிகர் சேரன், நடிகை ஷெரின், நடிகர் மற்றும் இசைக்கலைஞர் மோகன் வைத்யா, இலங்கை மாடல் தர்ஷன், நடன இயக்குனர் சாண்டி, மலேசிய மாடல் முகன்ராவ் மற்றும் நடிகை ரேஷ்மா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
 
முதல் நாளில் போட்டியாளர்கள் அறிமுகம் மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது. இன்று முதல் வழக்கமான சுவாரஸ்ய நிகழ்வுகள், நட்பு, பிரச்சனை, சண்டைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments