Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெற்ற மகனையே கழுத்தை நெறித்து கொலைமுயற்சி செய்த வனிதா! வைரலாகும் வீடியோ.!

Advertiesment
பெற்ற மகனையே கழுத்தை நெறித்து கொலைமுயற்சி செய்த வனிதா! வைரலாகும் வீடியோ.!
, செவ்வாய், 9 ஜூலை 2019 (12:21 IST)
பிக்பாஸ் வீட்டிலிருக்கும் சொர்ணாக்கா வனிதா கொடிய ராட்சசி எனவும் அவர் முகமூடியை அணிந்து கொண்டு அங்கு நாடகமாடுகிறார் எனவும் சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்து வருகின்றனர். அதனை நிரூபிக்கும் வகையில் தான் பெற்ற மகனை கதற கதற கழுத்தை நெறித்து கொலைமுயற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 
கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட வனிதாவுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா மகளும் பிறந்தனர். பின்னர் இருக்காருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  2005ஆம் ஆண்டு விவாகரத்து செய்துக்கொண்டனர்
 
இதற்கு பின்னர் ஆகாஷ் மற்றும் வனிதாவின் மகனை ஆகாஷ் தான் வளர்த்து வந்தார். அதற்கு வனிதாவின் தந்தை விஜயகுமாரும் சம்மதம் தெரிவித்து ஆகாஷ் பக்கமே நின்றார். அதன் பின்னர் ஸ்ரீஹரி, அவரது தாத்தாவான விஜயகுமாரிடம் தான் வளர்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது மகனை தன்னுடன் அழைத்து செல்ல தந்தை விஜயகுமாரிடம் வனிதா சண்டையிட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
இந்த வீடியோவில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி, நான் உன்னுடன் வர விரும்பவில்லை என்று கூறி அழுகிறான். ஆனால் வனிதா குழந்தையை வலுக்கட்டாயமாக இழுத்து கழுத்தை பிடித்து நெரிக்கிறார். பின்னர் ஸ்ரீஹரி அங்கிருக்கும் போலீசாரிடம் உதவி கேட்டு அவர்களின் கையை பிடித்துக்கொண்டு அழுகிறான்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"தியேட்டர் தான் பொண்டாட்டி மற்றதெல்லாம் கீப்" - அபிராமி ராமநாதன் பளீச்!