Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 18 April 2025
webdunia

ரணகளமான பிக்பாஸ் வீடு - குறும்படம் போட்டுக்காட்டுங்க கொந்தளித்த அனிதா!

Advertiesment
bigg boss 4
, செவ்வாய், 6 அக்டோபர் 2020 (15:30 IST)
பிக்பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த 4ம் தேதி முதல் துவங்கி விறு விறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் கவர்ச்சி சர்ச்சை , சண்டை என ஒவ்வொன்றுக்கும் தேடிப்பிடிச்சு ஆளை பொறுக்கிப்போட்டுள்ளனர் விஜய் டிவி. ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தங்களுக்கு கொடுத்துள்ள ஸ்க்ரிப்ட் படி நன்றாக performance செய்து வருகின்றனர்.

அந்தவகையில் முதல் நாள் முழுக்க ஷிவானி பக்கம் கேமராவை திருப்பி வைத்த விஜய் டிவி தற்ப்போது அனிதா சம்பத் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது. அனிதாவிற்கு ஆர்மிஸ் உருவாகியுள்ளதால். அவரை அதிகப்படியான பிரேம்களில் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சற்றுமுன் வெளியாகிய ப்ரோமோ வீடியோவில் சுரேஷ் சக்ரவர்த்தி அனிதாவை பற்றி புறம் பேசியதை கண்டித்து வெளிப்படையாக கூற அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுவிட்டது. அதாவது, "நியூஸ் ரீடர் கிட்டலாம் நான் பேசமாட்டேன். அவங்க பேசினால் எச்சில் தெறிக்கும்" என அனிதாவை பற்றி கீழ்த்தரமாக பேசியுள்ளார்.

இதை கண்டித்து நேரடியாகவே கேட்ட அனிதாவிடம் நான் அப்படி சொல்லவில்லை என சண்டை இழுக்க அனிதா குறும்படம் போட்டுக்காட்டுங்கள் என கட்டமாக கூறுகிறார். உடனே அங்கிருந்த மற்ற ஹவுஸ்மேட்ஸ் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்கின்றனர். ஆக பிக்பாஸ் இன்று விறு விறுப்பாக இருக்கும். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுடச்சுட வெளியான வேகத்தில் தமிழ் ராக்கர்ஸில் வர்மா!