Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நமிதாவின் ஆடையை பற்றி விவாதித்த ஆண் போட்டியாளர்கள்!

Advertiesment
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நமிதாவின் ஆடையை பற்றி விவாதித்த ஆண் போட்டியாளர்கள்!
, செவ்வாய், 11 ஜூலை 2017 (12:13 IST)
பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் வீட்டில் பிரபலங்கள் தொடந்து 3 வது வாரமாக இருந்து வருகின்றனர். அடிக்கடி ஏதாவது வாய் சண்டை, அழுகை என தொடர்ந்து கொண்டிருக்கிறது.
 
 
தொடங்கிய நாள் முதலே இந்நிகழ்ச்சி குறித்து பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றன. இந்த  நிகழ்ச்சியில் நமிதாவும் ஒரு போட்டியாளர். நடிகை நமிதா எப்போதுமே அரைகுறை ஆடைகளைதான் அணிவார்.
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் அணியும் ஆடைகள் சில நேரங்களில் அடக்க ஒடுக்கமாக இருந்தாலும், பல நேரங்களில் கவர்ச்சியாகத்தான் உடை அணிகிறார். இது குறித்து சக ஆண் போட்டியாளர்கள் பேசிக்கொள்வது என்னவென்றால், நடிகர் வையாபுரி எனக்கு ஒரு சந்தேகம் என்றும் நமிதாவுக்கு எப்படி இந்த ஆடை நிற்கிறது ப்ராமிசாக எனக்கு தெரியவில்லை என  கூற, அதற்கு சினேகன் இரட்டை அர்த்தத்தில் நிக்கலனாதான் நீங்க சந்தோஷ படணும், சந்தேக படணும் என்று  சிரித்துக்கொண்டே கூறுகிறார்.
 
அதற்குள் சக்தி குறுக்கிட்டு நிக்க முடியிறதாலதான் நிக்குது இல்லை என்றால் எப்படி நிற்கும் என கிண்டலாக கூறுகிறார்.  அதற்குள் கஞ்சா கருப்பு அந்த ட்ரஸ்ஸ டைட் பண்ணி ஏதாவது நாடா, கொக்கி கொடுத்திருப்பாங்க என கூறுகிறார். அதற்கு  ஆரவ் தும்பினா கீழே விழும் என்றும் சொல்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் அக்கா தங்கையாக பார்க்கிறோம்  என்று கூறி இவ்வாறு ஒரு ஆடையை பற்றி ஆபாசமாக பேசிக்கொள்வதை பார்த்து சமூக வலைதளங்களில் பலர் திட்டி  விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் பரணியால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கஞ்சா கறுப்பு கூறி கஞ்சா கருப்பு  பிரச்சனையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகைகளை அழைத்துக்கொண்டு தீவுக்குப் பறக்கும் வெங்கட் பிரபு