Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியன் 2 படத்தில் இணைந்த "பிக்பாஸ் 3" பிரபலம்!

இந்தியன் 2 படத்தில் இணைந்த
, புதன், 30 அக்டோபர் 2019 (11:27 IST)
ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமான இயக்குனர் ஷங்கர் இயக்கும் 14வது படம் இது. பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் தாயாருக்கும் இப்படம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.


 
கமல், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர்,  ரகுல் ப்ரீத் சிங் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவரும் இப்படத்தின் அடிக்கடி செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கிறது. அண்மையில் கூட கமல் ஹாசன் சேனாதிபதி தோற்றத்தில் கருப்பு குதிரையில் சண்டைக்கு செல்லும் காட்சிகளும் , ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வெளியாகி ஸ்வாரஸ்யத்தை ஏற்படுத்தியிருந்தது.
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கமலின் ஸ்டைலிஷ் அண்ட் லுக்குக்கு காரணமாக இருந்த அம்ரிதா ராம் இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசனின் ஸ்டைலிஷராக பணியாற்றவுள்ளார். இவர் ஏற்கனவே விஸ்வரூபம்-2  படத்தில் பணியாற்றியிருந்தார். இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசனின் 90 வயது முதியவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதோடு அவருடைய வயதிற்கேற்ற முகபாவம், துணி அலங்காரமும் அம்ரிதா ராம் செய்து வருகிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"பிகில்" குழுவிற்குள் மோதல்? - வீடியோ!