Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓரளவுக்கு சேன்ஞ் ஆகிட்டாங்களே... பாட்டி டாஸ்கில் பட்டய கிளப்பும் அர்ச்சனா!!

Advertiesment
ஓரளவுக்கு சேன்ஞ் ஆகிட்டாங்களே... பாட்டி டாஸ்கில் பட்டய கிளப்பும் அர்ச்சனா!!
, செவ்வாய், 10 நவம்பர் 2020 (09:54 IST)
பிக்பாஸ் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பித்துவிட்டது. நிகழ்ச்சியில் புது புது டாஸ்க்களை கொடுத்து சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முயற்சித்து விளையாடி வருகின்றனர். அந்தவகையில் தற்ப்போது " பாட்டி சொல்லை தட்டாதே" என்ற புதிய டாஸ்க் கொடுத்துள்ளனர்.

இதில் பாட்டியானா அர்ச்சனா பேரன், பேத்திகளுக்கு சொத்தை காட்டி வீட்டுக்கு வரவைத்து தன்னை யார் நன்றாக பார்த்துக்கொள்கிறார்களோ அவருக்கு தான் இந்த சொத்து என கூறிவிடுகிறார். உடனே ஆளாளுக்கு அவரை மகிழ்ச்சி படுத்துகின்றனர். இதில் பாலாஜி பெட்டியை திருடுவதற்கு பிளான் போட்டுவிட்டார்.

இதில் ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சி போச்சு... அதாவது,  பாலாவை பெட்டி திருடன் டாஸ்க்னு சொல்லி அவர திருட வெச்சு ஜெயிக்க வைக்க போறீங்க, அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து பாலாவையும், டாஸ்க் சரியா செஞ்சான்னு அர்ச்சனாவையும் காப்பாத்த போறீங்க. என்னமா பிளான் பண்ணி டாஸ்க் கொடுக்கிறாங்க...

ரொம்ப பக்குவ பட்டவங்க தன் தவறை உணர்ந்து சரி பண்ணிப்பாங்க. அப்படித்தான் தற்ப்போது அர்ச்சனா தன்னை மாத்திக்கிட்டு விளையாட்டில் மட்டும் கவனத்தை செய்துவது போன்று தெரிகிறது. நல்ல சேன்ஞ்... இருக்குற இடத்தை கலகலப்பா மாற்றுவதில் அர்ச்சனா வேற லெவல்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவுக்கு பின் மாறும் திரையுலகினர் வாழ்க்கை… யுடிபூப் சேனலை தொடங்கிய ராணா!