Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷப்பாஹ்... சும்மாவே தொன தொனன்னு பேசுவாங்க... இதுல எஃப்.எம் டாஸ்க் வேற!

Advertiesment
ஷப்பாஹ்... சும்மாவே தொன தொனன்னு பேசுவாங்க... இதுல எஃப்.எம் டாஸ்க் வேற!
, வியாழன், 5 நவம்பர் 2020 (13:49 IST)
பிக்பாஸ் வீட்டில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு ரேடியோ ஜாக்கி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த துறையில் மிகவும் பிரபலமானவர் சுசித்ரா என்பதால் அவரை ஆர்.ஜே-வாக நியமித்துள்ளார் பிக்பாஸ்.

வீட்டில் இருக்கும் அர்ச்சனா , அனிதா, சனம் உள்ளிட்ட பெரும்பாலானோர் பேச ஆரம்பித்துவிட்டாள் நிறுத்துவதற்கு ரொம்ப கடினம். அந்த அளவிற்கு வாய்க்கு வந்ததையெல்லாம் பேசியே உசுர வாங்கிடுவாங்க. இதுல  எஃப்.எம் டாஸ்க் வேற கொடுத்திருக்காங்க. இந்த டாஸ்க் முடியும் வரை ஆடியன்ஸ் காதுல பஞ்சு வச்சிட்டு பிக்பாஸ் பாருங்க. எல்லாம் உங்க நலனுக்காக தான் சொல்றோம்.

வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பெரும்பாலானோர் ஓரளவுக்கு ஆக்டீவாக டாஸ்க்களை விளையாடி தங்களது பங்கிற்கு எதையாவது செய்து வருகின்றனர். ஆனால், ஜித்தன் ரமேஷ் என்ன பன்றாருண்ணு அவருக்கே தெரியல. மக்களாகிய நாம் டிவியில் பிக்பாஸ் பார்க்கிறோம்.

ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் வீட்டிற்குள் பிக்பாஸ் பார்க்கிறார் அவ்வளவு தான் நமக்கும் அவருக்கும் வித்யாசம். இந்த டாஸ்க்கில் கூட பாருங்க... என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன்.. உசுரு இருக்கு வேற என்ன வேணும் சந்தோஷமா இருப்பேன்.. ரகிடா.. ரகிடா.. ரகிடா என்பது போல் கூலாக அமர்ந்திருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விபிஎஃப் நாங்க கட்டுறோம்; வசூலில் பாதியை தருவீங்களா? – தயாரிப்பாளர்களுக்கு கேள்வி!