Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"பிக்பாஸ் 3" நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 3 திரைப்பிரபலங்கள்!

Webdunia
புதன், 15 மே 2019 (16:12 IST)
பிக்பாஸ் 3 சீசனில் கலந்துகொள்ளும் திரைபிரபலங்கள் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


 
கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் 3 சீசனுக்கான பணிகள் துவங்கி கமல் பங்குபெறும் ப்ரோமோ ஷூட் படுமும்முரமாக நடைபெற்றது. 
 
ரசிகர்களின் ஏகோபித்த வரவவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது  சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக உள்ளது. இதனை தற்போது விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக  வெளியிட்டுள்ளது.மேலும் அந்த ப்ரோமோ வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் ஸ்டைலாக தோன்றியுள்ளார்.
 
இதற்கு முன்னதாக இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் ரமேஷ் திலக், சுதா சந்திரன், லைலா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் அதை மூவருமே மறுத்தனர். அதேவேளையில் நடிகை சாந்தினி தமிழரசன் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் நடிகை ஆல்யா மானஷா, சாக்‌ஷி அகர்வால், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் போன்ற திரைப்பிரபலங்கள் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே கூடிய விரைவில் போட்டியாளர்களின் பட்டியலும் அதிகாரபூர்வமாக  வெளியிட வாய்ப்புள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கெளரவம்.. ஆனால் இவ்வளவு தாமதமாகவா?

இந்த மாதிரி ஹீரோ கிடைக்குறது கஷ்டம்!.. தயாரிப்பாளருக்காக கஷ்டப்பட்ட ஆர்.ஜே பாலாஜி!..

ராம் சரணுக்கு கை மாறிய சூர்யா படம்!.. தமிழில் கால் பதிக்க ப்ளான் போல!..

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா... (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது!

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments