Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் சீசன் -5 ......வைரலாகும் மீம்ஸ்

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (21:06 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டது.
 

இந்த நிலையில் இன்று காலை விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் ஐந்தாவது சீசன் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி சற்று முன்னர் விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் புரோமோ வீடியோ வெளியாகி சமீபத்தில் வெளியானது.

இதில், கமல்ஹாசன் ஆரம்பிக்கலாமா என்று கூறுவதுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5 வது சீசனில் லோகோ அறிமுகம் செய்தார். இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என்பது உறுதி செய்யப்பட்டது.

அனேகமாக அக்டோபர் 3ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என்றும் அதனை அடுத்து 100 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுவரை இல்லாத அளவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை வித்தியாசமாக தேர்வு செய்ய
விஜய் டிவி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

மேலும், இந்த சீசனில் எம்.எஸ்,பாஸ்கர், ரம்யா கிருஷ்ணன்,  ஜிபி.முத்து உள்ளிட்ட  போட்டியாளர்க்ள் இடம்பெறலாம் என்ற தகவல்களும் வெளியாகிறது.  

இந்நிலையில், பிக்பாஸிற்கு அதிக ரசிகர்கள் உலகெங்கிலும் உள்ளதால், பிக்பாஸ் குறித்த மீம்ஸ்கள் இன்று இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments