தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தலைமையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் உள்ளாட்சி தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ளார். 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் பல முக்கிய கட்சிகளும் பங்கேற்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நா.த.க, ம.நீ.ம ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.