Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் முடியுற வரை அத பண்ணாதீங்க… விஜய் சேதுபதிக்கு நிபந்தனை வைத்த நிறுவனம்!

vinoth
சனி, 5 அக்டோபர் 2024 (07:56 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் ஆறாம் தேதி தொடங்க இருக்கிறது. கடந்த 7 சீசன்களாக இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், அதில் இருந்து விலகிக் கொண்டார். இப்போது அவருக்குப் பதிலாக நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகும் போட்டியாளர்கள் யார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அது குறித்த சில பெயர்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியிடம், பிக்பாஸ் தயாரிப்பு நிறுவனம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை விஜய் சேதுபதி அந்நிகழ்ச்சி தவிர, வேறு எந்த படத்துக்கும் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் ப்ரமோஷன் செய்யக் கூடாது என்று நிபந்தனை வைத்துள்ளதாம். விஜய் சேதுபதி பல நல்ல சிறு பட்ஜெட் படங்களுக்கு ப்ரமோஷன் செய்து கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிரடி மாற்றங்களுடன்..! கலக்கலாக மீண்டும் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11

2025ஆம் ஆண்டை மிஸ் செய்த கார்த்தி ரசிகர்கள்.. ஒரு படம் கூட ரிலீஸ் இல்லை..!

தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்தியாவிலேயே வேண்டாம்.. வெளிநாட்டில் ‘ஜனநாயகன்’ ஆடியோ ரிலீஸ் விழா?

பொங்கலுக்கு ‘பராசக்தி’ ரிலீஸ் உறுதி.. ஆனால் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதல் இல்லை..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் அசத்தல் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments