Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தார்பார் தோல்வி… வேட்டையன் ரிலீஸில் சிக்கலா?- லைகா நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுக்கும் விநியோகஸ்தர்கள்!

vinoth
சனி, 5 அக்டோபர் 2024 (07:48 IST)
ஜெயிலர் என்ற சூப்பர் ஹிட் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர. அனிருத் இசையமைக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகிக் கவனம் ஈர்த்துள்ளன.

படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் ஞானவேல் “படத்தில் ரஜினிகாந்த் என்கவுண்ட்டர் போலீஸாக நடிப்பது உண்மைதான். அவர் ஏன் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக மாறினார், அதற்கான காரணம் என்ன என்பதைப் படத்தில் காட்டியுள்ளோம்” எனப் பேசியுள்ளார்.  இதற்கிடையில் டிரைலர் வெளியானதில் இருந்து படம் என்கவுண்ட்டருக்கு ஆதரவானக் கருத்தைப் பேசுகிறதோ என்ற விவாதம் எழுந்துள்ளது. இது சம்மந்தமாக படத்துக்கு தடை விதிக்க சொல்லி  வழக்கு ஒன்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரிலீஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸில் சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் லைகா & ரஜினி கூட்டணியில் உருவான தர்பார் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அப்போதே அதன் விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு கோரிக்கை வைத்தனர். ஆனால் அப்போது லைகா நிறுவனம் அடுத்தடுத்து வரும் படங்களில் அதைப் பார்த்துக் கொள்ளலாம் என சொல்லி சமாதானப்படுத்தியது. இந்நிலையில் இப்போது வேட்டையன் ரிலீஸின் போது அந்த விநியோகஸ்தர்கள் இது சம்மந்தமாக போர்க்கொடி தூக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

40 நாட்களுக்கு முன்பே ரஜினி சார் சிகிச்சைப் பற்றி சொன்னார்… இயக்குனர் லோகேஷ் பகிர்ந்த தகவல்!

வேட்டையன் படத்தில் நடிக்க அமிதாப் பச்சனுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் ஹரிஷ் கல்யாண் படம்… இயக்குனர் இவரா?

பிக்பாஸ் முடியுற வரை அத பண்ணாதீங்க… விஜய் சேதுபதிக்கு நிபந்தனை வைத்த நிறுவனம்!

தார்பார் தோல்வி… வேட்டையன் ரிலீஸில் சிக்கலா?- லைகா நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுக்கும் விநியோகஸ்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments