Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது பிக் பாஸ் 3..! பிரம்மாண்ட செட்டில் கமல்! முழு விவரம் இதோ.!

Webdunia
புதன், 8 மே 2019 (17:54 IST)
கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ்.  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது.


 
கமல் தொகுத்து வழங்கி மாபெரும் வெற்றிபெற்ற  இந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வேளையில் இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வந்தது. 
 
அரசியலலில் பிஸியாகிவிட்ட கமல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெறுவாரா மாட்டாரா என்ற மிகப்பெரிய கேள்வி குறியும் நிலவி வந்த நிலையில் தற்போது சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது . அதாவது பிக்பாஸ் மூன்றாவது நிகழ்ச்சியையும்  கமல் தான்  தொகுத்து வழங்குகிறார்.
 
இந்நிலையில் பிக் பாஸ் மூன்றாவது சீசனுக்கான புரொமோ ஷூட் இன்று தொடங்கியது. இதற்காக சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட பிக் பாஸ் வீட்டின்  செட்டில், கமல்ஹாசன் கலந்துகொண்ட காட்சிகள் தற்போது ஷூட் செய்யப்பட்டு வருகின்றன. 


 
இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகலாம் என தெரிய வருகிறது. மேலும் மூன்றாவது சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளும் தொடங்கிவிட்டன. 
 
எனவே ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி பட டைட்டில் இல்லை. ‘சூர்யா 44’ டைட்டில் டீசர் வெளியீடு..!

ஷாருக் கானின் ‘கிங்’ படத்தின் இயக்குனர் திடீர் மாற்றம்!

ராமாயணம் படத்தில் வில்லனாக நடிக்க இவ்வளவு சம்பளமா?... ஆச்சர்யப்படுத்தும் யாஷ்!

அமெரிக்காவில் கமல்ஹாசனோடு திரைக்கதை எழுதும் ‘அன்பறிவ்’ மாஸ்டர்ஸ்!

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments