Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் 3 யின் அடுத்த கண்டெஸ்டண்ட் இவர் தானாம்!

Advertiesment
பிக்பாஸ் 3 யின் அடுத்த கண்டெஸ்டண்ட்  இவர் தானாம்!
, வியாழன், 14 மார்ச் 2019 (15:56 IST)
கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ்.  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது.
கமல் தொகுத்து வழங்கி மாபெரும் வெற்றிபெற்ற  இந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வேளையில் இந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான எண்டிமால் நிறுவனம், தமிழில் இந்த ஆண்டு பிக் பாஸ் 3 வது நிகழ்ச்சி நடத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில மாதத்தில் இதற்கான ஒப்பந்தம் போடப்படும் என்று தெரிவித்துள்ளனர். 
 
இந்த நிலையில் சமீப நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறப் போகும் போட்டியாளர்கள் பற்றிய விபரங்களும் அடிக்கடி கிடைத்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3ல்  பிரபல நடிகை கஸ்தூரி பங்கு பெறப் போவதாக தகவல் வந்தது. அவரை அடுத்து  தற்போது பிரபல நடிகை சூசன் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் மைனா படத்தில் வில்லியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கே.ஜி.எப் 2 -விற்கு போட்டியாக ஆர்.ஆர்.ஆர் படத்தின் அப்டேட்ஸ் சொன்ன ராஜமௌலி!