Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழம்பெரும் நடிகர் காலமானார்: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (16:56 IST)
பழம்பெரும் நடிகர் காலமானார்: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்!
பழம்பெரும் வங்காள நடிகர் சௌமித்ரா சாட்டர்ஜி என்பவர் இன்று காலமானதை அடுத்து அவருக்கு குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்
 
இந்திய சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவரான சௌமித்ரா சாட்டர்ஜி பல வங்காள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.. இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் இன்றி இருந்த நிலையில் இன்று அவர் காலமானார் 
 
மறைந்த நடிகர் சௌமித்ரா சாட்டர்ஜி மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் பிரதமர் மோடி அவர்களும் தனது சமூக வலைத்தளத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது படங்களின் மூலம் மேற்கு வங்கத்தின் உணர்வுகளை காட்சிப்படுத்தியது சௌமித்ரா சாட்டர்ஜி என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
 
பழம்பெரும் நடிகர் செளமித்ரா சாட்டர்ஜி அவர்களின் மறைவிற்கு இந்திய திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments