Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்பருத்தி சீரியல் கார்த்தி கதாபாத்திரத்தில் இனி இவர்தான் – அடித்தது ஜாக்பாட்!

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (15:38 IST)
செம்பருத்தி சீரியலில் கார்த்தி கதாபாத்திரம் நீக்கப்பட்ட நிலையில் இப்போது அவருக்கு பதில் இணையத் தொகுப்பாளர் அக்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல கவனம் பெற்ற மெகா தொடர் செம்பருத்தி. இதில் கார்த்திக் ராஜ், ஷப்னம் மற்றும் பிரியா ராமன் ஆகியோர் நடித்து வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஜி தமிழ் தொலைக்காட்சி டிவிட்டர் பக்கத்தில் ‘செம்பருத்தி தொடரின் வெற்றிக்காக கார்த்திக்கின் அர்ப்பணிப்பும் உழைப்பும் பாராட்டத்தக்கது. ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் கார்த்திக்கு பதில் வேறு ஒருவர் நடிக்க உள்ளார். ஆனால் எதிர்காலத்தில் கார்த்திக்கோடு இணைந்து ஜி தமிழ் பணியாற்றும்’ எனக் கூறியது.

இந்நிலையில் இப்போது கார்த்திக்கின் கதாபாத்திரத்துக்கு பதிலாக பிஹைண்ட்வுட்ஸ் உள்ளிட்ட இணைய சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அக்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவரது புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments