Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்சரண் - உபாசனா தம்பதியின் பெண் குழந்தைக்கு அழகிய பெயர்!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (19:37 IST)
தெலுங்கு திரைஉலகின் முன்னணி நடிகரான ராம்சரண் தேஜா மனைவி உபாசனாவிற்கு பெண் குழந்தைக்கு இன்று பெயர் சூட்டியுள்ளனர்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண்.   இவருக்கும், அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனாவிற்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் திருமணம் ஆகி 11 வருடங்கள் கழித்து ராம் சரண்யா உபாசனா தம்பதிக்கு சமீபத்தில்  பெண் குழந்தை பிறந்துள்ளது.

இவர்களுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துகள் கூறியிருந்தனர். இதுபற்றி ‘ராம்சரண்,- உபாசனா தம்பதியர் தங்கள் சமூக வலைதள பக்கத்தில், ''தங்கள் குழந்தைக்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சியடைந்தோம். அனைத்து அன்பிற்கும், வாழ்த்துகளுக்கும்  நன்றி'' என்று ஒரு டுவீட் பதிவிட்டு, தங்கள் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், ராம்சரண்-  உபாசனா தம்பதியர்க்குப் பிறந்த பெண் குழந்தைக்கு 'க்லின் காரா கொனிடலா' எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

எனவே, திரையுலகினரும்,  ரசிகர்களும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments