தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை லாவண்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களுக்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சசிகுமார் நடிப்பில் உருவான பிரம்மன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. இவர் மாயவன் படத்தில் நடித்த நிலையில், தற்போது தணல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இவர் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் வருண் தேஜூவுடன் அந்தாரிக் படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
இந்த நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.
அதன்படி, நேற்று இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி திருமண நிச்சயதார்த்ததிற்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி வாழ்த்துகள் கூறியிருந்தார்.
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் நாகபாபுவின்( இவர் சிரஞ்சீவியின் சகோதரர் ஆவார்) மகன் வருண் தேஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்தாண்டு நாகபாபுவின் மகள் நிஹாரிகா, சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் கருத்துவேறுபாடு இருந்து வரும் நிலையில், பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இத்திருமண நிச்சயதார்த விழாவில் நிஹாரிகாவின் கணவர் கலந்துகொள்ளவில்லை. அவர் வேண்டுமேன்றே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லையா? இல்லை, கருத்து வேறுபாட்டால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா என்று தெரியவில்லை. இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.