Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவிட்சர்லாந்தில் என்ன நடந்தது? - வைரமுத்து உதவியாளர் விளக்கம்

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (13:31 IST)
சின்மயி கூறியது போல் சுவிட்சர்லாந்தில் கவிஞர் வைரமுத்து தவறாக நடக்கவில்லை என அவரின் உதவியாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 
15 வருடங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்துக்கு பாடல் நிகழ்ச்சிக்காக சென்ற போது, தனது அறைக்கு வருமாறு வைரமுத்து அழைத்தார் என சின்மயி மற்றும் அவரின் தாயார் ஏற்கனவே புகார் கூறியிருந்தனர். ஆனால், அதை வைரமுத்து மறுத்துள்ளார். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என கூறியுள்ளார்.
 
இதுகுறித்து விளக்கமளித்துள்ள வைரமுத்துவின் உதவியாளர் பாஸ்கர்  “அந்த நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாளே வைரமுத்து அங்கிருந்து கிளம்பிவிட்டார். சின்மயியும், அவரின் தாயாரும் சில நாட்கள் அங்கு தங்கியிருந்தனர். ஆனால், வைரமுத்துவால் தான் அங்கிருந்து உடனடியாக சுவிட்சர்லாந்தில் இருந்து கிளம்பியதாக பொய் சொல்கின்றனர். சின்மயியின் புகாரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷும் மறுத்துள்ளார். எந்த வருடம் நடந்தது என்பது கூட தனக்கு நினைவில்லை சின்மயி கூறுகிறார். வருடம் எப்படி மறக்கும்?
 
மேலும், 2012ம் வருடம் வரை அவர் வைரமுத்துவுடன் தொடர்பில்தான் இருந்தார். 2012ம் ஆண்டு முதல்வர் நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் பாட மறுத்ததால் அவரை வைரமுத்து ஒதுக்கியே வைத்திருந்தார். 
 
திருமணத்திற்கு அழைப்பு விடுக்க சின்மயி வந்த போது கூட அவரை சந்திக்க வைரமுத்து அனுமதி அளிக்கவில்லை. அவரின் மகன் கார்க்கியிடம் பரிந்துரைக்க சொல்லி சின்மயி கேட்ட பின்பே வைரமுத்து அழைப்பிதழை வாங்கினார். அப்போது, தனது செயலுக்காக சின்மயி மன்னிப்பும் கேட்டார். அதனால்தான், அவரின் திருமண விழாவில் வைரமுத்து கலந்து கொண்டார்.
 
ஆனால், தற்போது அனைத்தையும் மாற்றி மாற்றி பேசுகிறார்” என பாஸ்கரன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி பட டைட்டில் இல்லை. ‘சூர்யா 44’ டைட்டில் டீசர் வெளியீடு..!

ஷாருக் கானின் ‘கிங்’ படத்தின் இயக்குனர் திடீர் மாற்றம்!

ராமாயணம் படத்தில் வில்லனாக நடிக்க இவ்வளவு சம்பளமா?... ஆச்சர்யப்படுத்தும் யாஷ்!

அமெரிக்காவில் கமல்ஹாசனோடு திரைக்கதை எழுதும் ‘அன்பறிவ்’ மாஸ்டர்ஸ்!

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்