Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2024 ஆம் ஆண்டில் தனக்குப் பிடித்த படமாக இந்திய படத்தைத் தேர்வு செய்த ஒபாமா!

Advertiesment
2024 ஆம் ஆண்டில் தனக்குப் பிடித்த படமாக இந்திய படத்தைத் தேர்வு செய்த ஒபாமா!

vinoth

, திங்கள், 23 டிசம்பர் 2024 (08:57 IST)
பாயல் கபாடியாவின் ’ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதைப் பெற்றது. அதன் பின்னர்  நவம்பர் மாதத்தில் இந்தியாவில்  குறிப்பிட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. கிராண்ட் பிரிக்ஸை வென்ற முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை இது பெற்றது. ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இந்தப் படத்தின் இந்திய விநியோக உரிமையைப் பெற்றுள்ளது. ஜிகோ மைத்ரா, சாக் அண்ட் சீஸ் பிலிம்ஸ் மற்றும் ரணபீர் தாஸ், அனதர் பர்த் ஆகிய படங்களைத் தயாரித்தவர்களே இந்தப் படத்தையும் தயாரித்துள்ளனர்.

கேரளாவில் இருந்து மும்பைக்கு தங்கள் வாழ்க்கை லட்சியத்தை அடைய இரண்டு பெண்கள் வருகிறார்கள் என்பதுதான் படத்தின் கரு.  அவர்களின் நோக்கம் நிறைவேறியதா என்பதே படத்தின் கதை. இந்நிலையில் தற்போது இந்த படம் கோல்டன் க்ளோப் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டில் தனக்குப் பிடித்த படங்களின் பட்டியலில் பராக் ஒபாமா ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ படத்துக்கு முதலிடத்தைக் கொடுத்துள்ளார்.  இதன் மூலம் கோல்டன் க்ளோப் விருதில் போட்டியிடும் அந்த படத்துக்குக் கூடுதல் கவனம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அல்லு அர்ஜுன் எதிராக அவதூறு கருத்துக்கள்: சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கை..!