Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணங்கான் ஷூட்டிங் நிறைவு… நடிகர் அருண் விஜய் நெகிழ்ச்சி!

vinoth
திங்கள், 15 ஏப்ரல் 2024 (08:21 IST)
பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான வணங்கான் திரைப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் இப்போது அந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த  படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல கவனத்தை ஈர்த்தது. வசனங்கள் இன்றி விறுவிறுப்பான காட்சிகளோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த டீசர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான இந்த டீசர் இதுவரை 8 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு வணங்கான் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை காட்டுகிறது. 

இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் சென்னையில் இந்த படத்தின் கடைசிகட்ட ஷூட்டிங்க் தொடங்கியது. அதையடுத்து இப்போது மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள அருண் விஜய் “நன்றி பாலா சார். உங்களோடு பணியாற்றியது மிகவும் கௌரவமான மற்றும் விலைமதிப்பில்லாத அனுபவம். ஒரு அசாதரமாண கதாபாத்திரத்தில் நடித்தது மனநிறைவாக உள்ளது. எனது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், ஸ்டண்ட் இயக்குனர் ‘ஸ்டண்ட்’ சில்வா ஆகியோருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹரிஷ் கல்யாணின் அந்த படத்தைப் பார்த்த இயக்குனர் வெற்றிமாறன்..! என்ன சொன்னார் தெரியுமா?

தொடங்கியது ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் வேலைகள்… ரிலீஸ் எப்போது?

கார்த்திக்கு வில்லன் ஆகும் நிவின் பாலி… எந்த படத்தில் தெரியுமா?

முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?... சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!

மணிகண்டன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறோம்- பிரபல இயக்குனர்கள் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments