Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அருண் விஜய் நடிக்கும் 36 வது திரைப்படத்தை- BTG Universal நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது!!

அருண் விஜய்  நடிக்கும் 36 வது திரைப்படத்தை-  BTG Universal நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது!!

J.Durai

, வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (18:06 IST)
BTG Universal நிறுவனம் தனது மூன்றாவது படத்தை துவக்கியுள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிக்கும் இப்படத்தை, மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். 
 
BTG Universal நிறுவன தலைவர் பாபி பாலச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு, BTG Universal நிறுவன தலைமை திட்ட இயக்குநர் டாக்டர் M.மனோஜ் பெனோ அனைத்து நிர்வாக பணிகளைகளையும் செய்கிறார்.   
 
பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் துவக்கவிழா,    நடைபெற்றது. 
 
முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தியதுடன், கிளாப் அடித்து படத்தினை துவக்கி வைத்தார். 
 
முன்னதாக இந்நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில்,  அருள்நிதி நடிப்பில்,  ஹாரர் திரைப்படமான “டிமாண்டி காலனி 2” படமும், இயக்குநர் விக்ரம் ராஜேஸ்வர் இயக்கத்தில்,  நடிகர்கள்  வைபவ் மற்றும் அதுல்யா நடிப்பில் காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள “சென்னை சிட்டி கேங்ஸ்டர்” திரைப்படமும், ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. 
 
தமிழ் திரையுலகம் இதுவரை கண்டிராத பிரம்மாண்ட அதிரடி சண்டைக் காட்சிகளுடன், பரபரப்பான ஆக்சன் திரில்லர் படமாக இப்படம் உருவாகவுள்ளது. 
 
நடிகர் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 
 
இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்கிறார்.  டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டர் ஆண்டனி எடிட்டிங் செய்கிறார்.
 
இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதவி இயக்குனர் மீது இயக்குனர் தேசிங்கு பெரியசாமி புகார்.. தலைமறைவானதால் பரபரப்பு..!