Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயலான் படத்துக்கு ப்ரமோஷன் செய்யும் அமீர்கான்… ஆஹா இந்தி ரிலீஸ் வேலய தொடங்கிட்டாங்க போல!

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (10:26 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.  இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த படம் பைனான்ஸ் பிரச்சனைகளில் சிக்கி ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது. இப்போது 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் தொடங்கப்பட்ட போது சிவகார்த்திகேயனுக்கு இவ்வளவு பெரிய மார்க்கெட் இல்லை. அப்போதே படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட் மற்றும் இந்தி டப்பிங் ரைட்ஸ் ஆகியவற்றை குறைவான தொகைக்கு விற்று விட்டார்களாம். ஆனால் அந்த உரிமைகளை இப்போது விற்றிருந்தால் பல மடங்கு அதிக தொகைக்கு விற்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தின் விஎஃப் எக்ஸ் பணிகளை மேற்கொண்டு வந்த பேந்தம் எஃப் எக்ஸ் ஸ்டுடியோ நிறுவனமும், இப்போது ஒரு தயாரிப்பாளராக இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதை உறுதிப் படுத்துவது போல படத்தின் புதிய போஸ்டரில் அந்த நிறுவனத்தின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை பேன் இந்தியா ரிலீஸாக வெளியிட உள்ள நிலையில், இந்தியில் இந்த படத்தை பற்றி நடிகர் அமீர் கான் ட்வீட் செய்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. இதன்  மூலம் இந்தி ரிலீஸுக்கான வேலையை இப்போதே படக்குழு தொடங்கிவிட்டது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுன் எதிராக அவதூறு கருத்துக்கள்: சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கை..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments