கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. இப்போது மாவீரன் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் கதைக்களம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் காஷ்மீர் பின்னணியில் ராணுவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது அவருக்கு பதிலாக ஜி வி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன் படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைப்பது இதுவே முதல் முறை.
இந்நிலையில் இந்த படத்தில் ராணுவ வீரராக நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு, அந்த கதாபாத்திரத்துக்காக மும்பையில் சில நாட்கள் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.