பத்திகிட்ட அவதார் 3 ரிலீஸ் ஜுரம்.. இந்தியாவில் முன்பதிவில் சாதனை!

vinoth
வியாழன், 27 நவம்பர் 2025 (14:49 IST)
டைட்டானிக் புகழ் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’. கடந்த 2009ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த அவதார் படத்தின் இரண்டாம் பாகமான அவதார் 2 கடந்த ஆண்டு ரிலீஸானது. இந்த படம் உலகளவில் பெரிய அளவில் வசூல் செய்தது.

இதையடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 19 ஆம் தேதி ”அவதார் 3- நெருப்பும் சாம்பலும்” படம் வெளியாகும் என அறிவித்துள்ளார் ஜேம்ஸ் கேமரூன். அதற்கான ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

இந்தியாவில் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும ஆங்கிலம் என ஆறு மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் தற்போதே இந்தியாவில் இந்த படத்தைப் பார்க்க சுமார் 12 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்னும் மூன்று வாரங்கள் மீதமிருப்பதால் அவதார் மூன்றாம் பாகம் இந்தியாவில் முன்பதிவில் மிகப்பெரிய வசூல் சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை சம்யுக்தாவுக்கு 2வ்து திருமணம்.. மணமகன் கிரிக்கெட் குடும்பத்தை சேர்ந்தவரா?

அவர் என் எல்லாமும்: இந்த வெற்றிடம் வாழ்நாள் முழுவதும் இருக்கும்: கணவர் தர்மேந்திரா குறித்து ஹேமாமாலினி!

ஜனநாயகன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியா… இல்லை கான்செர்ட்டா?.. குழம்பும் ரசிகர்கள்!

அந்த வார்த்தையை எல்லாம் படத்தில் வைக்க முடியாது… சென்ராயனுக்கு கீர்த்தி சுரேஷ் பதில்!

நான் என்ன செஞ்சேன்?.. என்னை மோசமானவன் போல காட்டிவிட்டீர்களே! கங்கை அமரன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments