Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதர்வா நடிப்பில் உருவாகும் புதிய படம் – வெளியான மிரட்டலான போஸ்டர்!

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2023 (08:17 IST)
இந்திய ராணுவம் சம்பந்தப்பட்ட படங்களை எடுத்து கவனம் ஈர்த்தவர் மலையாள இயக்குனர் மேஜர் ரவி.இவர் மோகன்லால், ஜீவாவை வைத்து இயக்கிய கீர்த்தி சக்ரா படம் தமிழில் அரண் என்ற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து குருஷேத்ரா என்ற படத்தில் மேஜர் ரவியின் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு செவன்டி ஒன் வார் என பெயர் வைத்துள்ளனர்.

மோகன்லால், மம்முட்டியை வைத்து படங்கள் இயக்கி வந்த மேஜர் ரவி தனது கடைசிப்படம் பிக்கெட்டை பிருத்விராஜை வைத்து இயக்கினார். அப்படம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இப்போது அவர் அதர்வாவை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.இந்த படத்துக்கு தணல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

பிரசாந்த் நீல் & ஜூனியர் என் டி ஆர் இணையும் படம் ட்ராப்பா?... இணையத்தில் பரவும் தகவல்!

கைவிட்ட நெட்பிளிக்ஸ்… வேறு ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா தங்கலான்?

ஷூட்டிங் ஸ்பாட்டில் அறிமுக இயக்குனரை அவமானப்படுத்திய கவின்?

ஜூனியர் என் டி ஆரை இயக்கும் நெல்சன்… நண்பனுக்கு வாய்ப்பு வாங்கித் தந்த அனிருத்!

அடுத்த கட்டுரையில்
Show comments