Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேக்கப் ரூமில் படித்து 10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த நடிகை!

Webdunia
புதன், 8 மே 2019 (15:37 IST)
பிரபல தொலைக்காட்சியில் தொடரில் நடித்துவரும்  நடிகை அஷ்னூர் கவுர்  இரவு பகல் பாராமல் படித்து பத்தாம் வகுப்பு தேர்வில் 93 சதவீத மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சிபெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்தியுள்ளார். 


 
இதை பற்றி அஷ்னூர் தனது இன்ஸ்டாகிராமில் கூறுகையில், நான் 90 சதவீத மதிப்பெண்கள் தான் எடுப்பேன் என எதிர்பார்த்தேன்  ஆனால் 93 சதவீதம் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. குழந்தை நட்சத்திரங்கள் நன்றாக படிக்க மாட்டார்கள் என்ற கருத்தை உடைக்க நினைத்தேன். 
 
நான் படப்பிடிப்பு நேரங்களில் மேக்கப் ரூமில் படித்துக் கொண்டிருந்தேன். மேலும் அதிகாலை 5.30 மணிக்கு எழுந்து படித்துவிட்டு செட்டுக்கு சென்று நடிப்பேன். ஒவ்வொரு ஷாட்டுக்கு இடையேயும் படித்தேன். தேர்வு நெருங்கியபோது கூட நான் நடித்துக் கொண்டிருந்தேன். 12 மணிநேர ஷூட்டிங் முடிந்து காரில் வீடு திரும்பும்போது படித்தேன், வீட்டிற்கு சென்ற பிறகு இரவு 1.30 சிலநேரம் 2.30 மணி வரை படித்தேன். பிறகு காலை 5.30 மணிக்கு எல்லாம் எழுந்து படித்தேன். 
 
தேர்வு முடிவை நினைத்து மிகவும் பதட்டமாக இருந்த நான்  முடிவுகள் வெளியானதை பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன். நான் மகிழ்ச்சி அடைந்ததை பார்த்து என் அம்மாவுக்கு ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது. ரிசல்ட் வந்ததில் இருந்து செட்டில் உள்ள அனைவரும் எனக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர் என்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

So I scored 93% in my 10th boards!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸீரோ பேலன்ஸில் குடும்பம் நடத்துவது எப்படி? உண்மையை நகைச்சுவையாக சொன்ன ‘குடும்பஸ்தன்’! - திரை விமர்சனம்!

மதிப்புமிக்க பத்ம விருதை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.. அஜித் அறிக்கை..!

இசைக் கச்சேரியில் செம்ம vibe-ல் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்பட தொகுப்பு!

கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு?... பேச்சுவார்த்தை நடத்தும் இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments