Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் ஆக்‌ஷன் கிங் ஆக காரணம் அவர்தான்! – மனம் திறந்த அர்ஜுன்!

நான் ஆக்‌ஷன் கிங் ஆக காரணம் அவர்தான்! – மனம் திறந்த அர்ஜுன்!
, வியாழன், 26 டிசம்பர் 2019 (17:48 IST)
கடந்த பல ஆண்டுகளாக சினிமா துறையில் நடித்து வரும் அர்ஜுன் தன் திரைப்பயணத்துக்கு ஆதர்சமாக இருந்த ஒரு பிரபலத்தை பற்றி கூறியுள்ளார்.

தமிழில் ஜெண்டில்மேன், முதல்வன், ஜெய்ஹிந்த் உள்ளிட்ட பல முக்கியமான படங்களில் நடித்து ஹிட் கொடுத்து ஆக்‌ஷன் கிங்காக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன். இடையே சிறிது காலம் நடிக்காதவர் 2000 தொடக்கங்களில் கிரி, ஏழுமலை போன்ற ப்ளாக்பஸ்டர் படங்கள் மூலம் மீண்டும் தமிழில் தனது ஆக்‌ஷன் கிங் பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

மங்காத்தா படத்தில் போலீஸ் அதிகாரியாக மக்களை கவர்ந்தவர் தொடர்ந்து இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தன் திரை உலக வாழ்க்கை குறித்து விழா ஒன்றில் பேசிய அர்ஜுன் ”நான் இளம் வயதிலேயே சினிமாவுக்கு நடிக்க வந்து விட்டேன். ஆனால் எனக்கு என்ன செய்வதென்றே அப்போது தெரியவில்லை. சரியாக நடிக்க தெரியாததால் பெரும்பாலும் ஆக்‌ஷன் காட்சிகள் உள்ள படங்களில் நடிப்பதையே விரும்பினேன். ஆக்‌ஷன் படங்களுக்கு எனக்கு ப்ரூஸ்லீதான் ஆதர்ஷம். அவரை கண்டுதான் ஆக்‌ஷன் படங்களில் நடிக்க விரும்பினேன். பிறகு சிவாஜி, நாகேஷ் போன்றவர்களின் படங்களை பார்த்த பிறகுதான் சரியாக நடிக்க கற்று கொண்டேன். இவர்கள்தான் நான் நடிகனாக காரணமாக இருந்தார்கள்” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்போ நான் உதவி செய்யல… இப்போ வருத்தபட்ரேன் – சரத்குமார் உருக்கம் !