Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோ படத்தில் அர்ஜுனுக்கு சிறப்பு சலுகை! முன்னாள் ஹீரோன்னா சும்மாவா?

Webdunia
திங்கள், 29 மே 2023 (13:54 IST)
விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது.

இப்போது சென்னை ஆதித்யராம் ஸ்டுடியோவில் தற்போது நடந்து வருகிறது. இதில் விஜய்யும் அர்ஜுனும் இளமையான தோற்றத்தில் மோதிக் கொள்ளும் ஆக்‌ஷன் காட்சிகளை லோகேஷ் படமாக்கி வருகிறாராம். கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக இந்த சண்டைக் காட்சிகளைதான் படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

அர்ஜுன் சம்மந்தப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளில் அவருக்கு விஜய்க்கு நிகரான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மற்ற படங்களில் வருவது போல ஹீரோவிடம் அடிவாங்கி தோற்றுப் போகும் வில்லனாக இதில் அர்ஜுன் கதாபாத்திரம் இருக்காது என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்
Show comments