Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பிகில்' ரிலீஸ் தேதி! அதிகாரபூர்வமாக அறிவித்த அர்ச்சனா!

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (21:56 IST)
தளபதி விஜய் நடித்து வரும் 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டு இருந்தாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடாமல் இருந்தது. இந்த நிலையில் தீபாவளி அன்று விஜய் சேதுபதியின் 'சங்கத்தமிழன்' மற்றும் கார்த்தியின் 'கைதி' ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்ட நிலையில், 'பிகில் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் தயாரிப்பு தரப்பை கேட்டுக்கொண்டனர்
 
இதனை அடுத்து சற்றுமுன் 'பிகில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி இந்த படம்  தீபாவளி அன்று வெளியாவது உறுதி என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். தளபதியின் இடத்தை தீபாவளி அன்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ரசிக்க தயாராகுங்கள் என்றும் ' தி வெயிட் இஸ் ஓவர்' என்றும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பிகில், கைதி மற்றும் சங்கத்தமிழன் ஆகிய மூன்று திரைப்படங்கள் தீபாவளி அன்று வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது 
 
மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் அர்ச்சனா கல்பாதி அட்டகாசமன 'பிகில்' திரைப்படத்தின் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். விஜய், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்பட பலர் இருக்கும் இந்த புகைப்படம் பெருமளவில் வரவேற்பை பெற்று வருகிறது
 
விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ்,  இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் வளர்ந்து வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments