Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மொழிகளில் வெளியாகிறது அரபிக்குத்து பாடல்! சன் பிக்சர்ஸ் வெளியிட்ட செம்ம தகவல்!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (15:13 IST)
விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது.

விஜய்யின் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் இணையத்தில் தெறி ஹிட் அடித்து வருகிறது.  தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏபரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து பாட்டு ஒன்று பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி பேன் இந்தியா ஹிட் ஆகி உள்ளது.

இந்த பாடல் வெளியானது முதல் தீயாய் பரவி வருகிறது. ரசிகர்கள் முதல் திரை உலகினர் வரை இந்த பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டு வந்தனர். அரபிக்குத்து பாடலுக்கு பிறகு ஜாலியோ ஜிம்கானா என்ற பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனாலும் அரபிக்குத்து பாடல் தொடர்ந்து ரசிகர்களைக் கவர்ந்துகொண்டே உள்ளது. தற்போது இந்த பாடல் 250 மில்லியன் பாரவையாளர்களை பெற்றுள்ளது.

தற்போது இந்த பாடலின் இந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷன் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments