நடிகை ஸ்ருதிஹாசன் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார். ஏற்கனவே சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஸ்ருதி. அந்த ரசிகர் நீங்க உடலில் எந்த பாகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி இருக்கீங்க எனக் கேட்க அதற்கு ஸ்ருதிஹாசன் மூக்கில் என்று பதிலளித்துள்ளார். நடிகைகள் தற்போது அதிகளவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொளவது வாடிக்கையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.