Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2 படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை… இசையமைப்பாளர் ரஹ்மான் பதில்!

vinoth
வியாழன், 6 ஜூன் 2024 (15:43 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. பாடல்களும் வெளியாகியுள்ளன. படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளன. முதல் பாகத்தில் ஏ ஆர் ரஹ்மன் கொடுத்த சூப்பர்ஹிட் பாடல்களோடு ஒப்பிடப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியன் 2 படத்துக்கு ஏன் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கவில்லை என்ற கேள்விக்கு அவரே ஒரு நேர்காணலில் பதில் சொல்லியுள்ளார். அதில் “இந்தியன் 2 படத்துக்கு நான் இசையமைக்க வேண்டும் என கமல் சார் விரும்பினார். ஆனால் இயக்குனரின் முடிவு வேறு மாதிரி இருந்தது. ஷங்கர் அந்நியன் மற்றும் நண்பன் ஆகிய படங்களில் வேறு இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிவிட்டு என்னிடம் வந்தார். சில நேரம் ஒரே இசையமைப்பாளரிடம் பணியாற்றினால் போர் அடித்துவிடும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments