Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மார்வெல் அந்தெம் வெளியீடு !

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மார்வெல் அந்தெம் வெளியீடு !
, செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (10:52 IST)
இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் மார்வெல் அந்தெம் பாடல் இணையத்தில் சற்றுமுன் வெளியாகி நம்பர் 1 ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது.  
 

 
இந்திய சினிமாவில் அசைக்கமுடியாத இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரகுமான் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க தனக்கென ஒரு ரசிகா் கூட்டத்தை வைத்திருப்பவா்.மேற்கித்திய இசையை நம்நாட்டினா் கேட்டுக்கொண்டிருந்ததை காலத்தை மாற்றி தன் திறமையால் நம் நாட்டின் இசையை உலகம் முழுக்க பரவச் செய்தவா்.
 
கடந்த இருப்பைந்து ஆண்டுகளாக உலகையே தன் இசை ராஜ்ஜியத்தால் கட்டிபோட்டிருக்கும் இசைப்புயல் ஏ.ஆா்.ரகுமான் திரைத்துறையில் உள்ள பல ஜாம்பவான்களின் லட்சிய கனவான அவென்ஜ்ர்ஸ்  சீரிஸில் இசையமைத்துள்ளார். 
 
2018-ல் உலக பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்ட திரைப்படம் அவென்ஜ்ர்ஸ் "இன்ஃபினிட்டி  வார்" சூப்பர் ஹீரோக்கள் படங்களை தயார் செய்யும் மார்வெல் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான இந்த படம் இந்தியாவிலும் அபார வசூலை அள்ளி குவித்தது.
 
இதனை கருத்தில் கொண்டு சமீபத்தில் மார்வெல் தயாரிப்பு நிறுவனம், பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸை அவென்ஜ்ர்ஸ் எண்ட் கேம் பதிப்புக்கு வசனம் எழுத ஒப்பந்தம் செய்தது. அதனையடுத்து  தற்போது இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் "மார்வெல் அந்தெம்" பாடல் இணையத்தில் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. வெளியாகவே உடனே இப்பாடல்  ரெண்டிங்கில் வலம் வர ஆரம்பித்துவிட்டது. 
 
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவரே பாடியுள்ள இந்த பாடல் இந்திய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும் அவென்ஜர்ஸ் சீரிஸ் ஹாலிவுட் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.ஜி. ஆரைக் கேள்வி கேட்டவர்; நாவல்களை சினிமா ஆக்கியவர் – மகேந்திரனுக்கு வைரமுத்து அஞ்சலி !