Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏஆர் ரஹ்மான் -சாய்ராபானு விவாகரத்து முடிவு? முடிவுக்கு வருகிறது 29 ஆண்டுகால பந்தம்..!

Advertiesment
ஏஆர் ரஹ்மான் -சாய்ராபானு விவாகரத்து முடிவு? முடிவுக்கு வருகிறது 29 ஆண்டுகால பந்தம்..!

Siva

, புதன், 20 நவம்பர் 2024 (07:31 IST)
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா ஆகிய இருவரும் பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், 29 ஆண்டுகால திருமண பந்தம் முடிவுக்கு வருவதாக தெரிகிறது.
 
நேற்று இரவு, ஏ.ஆர். ரகுமான் மனைவி சாய்ரா தனது கணவரை பிரிவதாக அறிவித்த சில மணி நேரங்களில் ஏ.ஆர். ரகுமான் அதனை உறுதி செய்தார். அவர் தனது எக்ஸ்பிரக்கத்தில், “நாங்கள் 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என்று எதிர்பார்த்த நிலையில், யாருமே எதிர்பாராத முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களால் நடுங்கும். உடைந்தவை மீண்டும் சேர வாய்ப்பு இல்லை. இந்த இக்கட்டான நேரத்தில் உங்கள் அன்பிற்கும் எங்கள் தனி உரிமைக்கு மதிப்பு அளித்தமைக்கு நன்றி,” என்று கூறியுள்ளார். 
 
அதேபோல், ஏ.ஆர். ரகுமான் மகன் ஏஆர் ஆமீன் தனது இன்ஸ்டா பக்கத்தில், “இந்த நேரத்தில் எங்களது தனி உரிமையை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். புரிதலுக்கு நன்றி,” என்று பதிவு செய்துள்ளார்.
 
இதன் மூலம், ஏ.ஆர். ரகுமான்-சாய்ரா தம்பதியின் 29 ஆண்டுகால திருமண பந்தம் முறிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1995ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏ.ஆர். ரகுமான்-சாய்ரா திருமணம் நடந்தது என்பதும், அந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷங்கர் படத்துடன் மோதும் ‘குட் பேட் அக்லி’.. ‘விடாமுயற்சி’ ரிலீஸ் எப்போது?