Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யின் அடுத்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை… லேட்டஸ்ட் தகவல்!

விஜய்யின் அடுத்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை… லேட்டஸ்ட் தகவல்!

vinoth

, திங்கள், 20 மே 2024 (14:29 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அவரின் கடைசி படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இப்போது அந்த இயக்குனர் ஹெச் வினோத்தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் சூர்யாவோடு சூரரைப் போற்று படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தார். அந்த படத்துக்காக தேசிய விருதும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜா பயோபிக்குக்காக ரஜினிகாந்தை சந்தித்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன்!