Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுபமாவின் 100 கோடி ரூபாய் வசூல் டில்லு ஸ்கொயர் இன்று முதல் ஓடிடியில்!

vinoth
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (12:11 IST)
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அந்த நடிகை. அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமானார்.

இப்போது தெலுங்கு சினிமாவில் பரபரப்பாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், டில்லு ஸ்கொயர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலரில் படத்தின் கதாநாயகன் சித்துவோடு படு ரொமாண்டிக்கான காட்சிகளிலும் முத்தக் காட்சிகளிலும் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான போஸ்டர் ஒன்றில் அனுபமாவின் கைகள் சித்துவின் இடுப்புக்கு கீழே இருப்பது போல இருந்தது. இதனால் இந்த படத்தின் மீது ஆபாசப் படம் என்ற முத்திரை விழுந்தது.

அதனால் படத்துக்கு இளைஞர்களின் ஆதரவு பெரியளவில் கிடைத்து 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. இந்நிலையில் இன்று முதல் இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. இந்த படத்துக்கு ஓடிடியிலும் பெரிய அளவில் ஆதரவு கிடைக்கும் என தெரிகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுன் எதிராக அவதூறு கருத்துக்கள்: சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கை..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments