Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுபமா நடிக்கும் ‘லாக்டவுன்’ பட ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட லைகா!

vinoth
சனி, 1 ஜூன் 2024 (06:25 IST)
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அந்த நடிகை. அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால் தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை. மாறாக தெலுங்கு சினிமா உலகம் அவரை வாரி எடுத்துக்கொண்டது. அங்கு பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த கார்த்திகேயா 2 திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. சமீபத்தில் அவர் நடித்த டில்லு ஸ்கொயர் திரைப்படம் சர்ச்சைகளை உருவாக்கி 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இந்நிலையில் இப்போது அனுபமா முதன்மை வேடத்தில் நடிக்கும் லாக்டவுன் என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஏ ஆர் ஜீவா என்பவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் அப்டேட்டை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படம் ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments