Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இணையும் பிரேமலு நாயகன்!

vinoth
சனி, 1 ஜூன் 2024 (06:19 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து  வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில்  கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் லைகா நிறுவனத்தின் பொருளாதார காரணங்களால் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டதை விட முன்பே தொடங்கி தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

இந்த படத்தில் நயன்தாரா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில் ஒரு முக்கிய வேடத்தில் பிரேமலு படத்தின் நாயகன் நஸ்லீன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேமலு படத்தின் வெற்றி அவரை தமிழ் நாட்டிலும் பிரபல நடிகராக்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங், இயக்குனர் பா ரஞ்சித் நெருங்கிய நண்பரா? அதிர்ச்சி தகவல்..!

ஸ்ருதிஹாசனை ’கூலி’ படத்தில் இணைந்த ‘பிகில்’ நடிகை.. ரஜினிக்கு இருவரும் மகள்களா?

சமந்தாவை சிறையில் தள்ள வேண்டும்.. மருத்துவரின் பதிவுக்கு விளக்கம் அளித்த சமந்தா..!

கடற்கரையில் ஜாலியாக நனைந்தவாறு போட்டோஷூட் நடத்திய மடோனா!

கிளாமர் உடையில் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments