Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிணத்தை வைத்து நடக்கும் அரசியல்… கவனம் ஈர்க்கும் ப்ளூ சட்ட மாறனின் ஆண்டி இந்தியன் டிரைலர்!

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (11:10 IST)
ப்ளு சட்ட மாறன் இயக்கியுள்ள ஆண்டி இந்தியன் திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு இப்போது சென்சார் சான்றிதழ் வாங்கியுள்ளது.

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ’ஆண்டி இந்தியன்’ என்ற திரைப் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என சென்சார் அதிகாரிகள் கூறியதாக வெளியில் தகவல் வெளிவந்துள்ளது. ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் நரேன், ராதாரவி உள்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ’ஆண்டி இந்தியன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்துவிட்டு சர்ச்சைக்குரிய காட்சிகள் படம் முழுவதும் இருப்பதால் இந்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என்று கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதையடுத்து மறு சென்ஸாருக்காக படத்தை அனுப்பும் முடிவில் படக்குழுவினர் இருக்கின்றனர். இந்நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். இந்நிலையில் ரிவைசிங் கமிட்டியில் படத்தைப் பார்த்தவர்கள் படத்தில் 38 இடங்களில் கட் சொல்லியும், படத்தின் பெயரான ஆண்ட்டி இண்டியன் என்பதை மாற்ற வேண்டும் என சொல்லியும் அப்படி செய்தால் மட்டுமே சான்றிதழ் தரமுடியும் என சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இப்போது வெற்றியும் பெற்றுள்ளனர்.

இதையடுத்து நேற்று மாலை இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியானது. டிரைலரில் ஒருவர் இறந்துவிட அவரின் சடலத்தை அடக்கம் செய்வது சம்மந்தமாக மத ரீதியாக நடக்கும் பிரச்சனைகளே கதை போல தெரிகிறது. அரசியல் பகடி என்ற வகைமையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் வெகுவாகக் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இணையும் படத்தின் ஹீரோயின் இவரா?

தியேட்டரில் படுதோல்வி எதிரொலி… திட்டமிட்டதற்கு முன்பே ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா கங்குவா?

நயன்தாரா திருமணத்தை அடுத்து இன்னொரு நடிகையின் திருமண வீடியோ.. அதுவும் நெட்பிளிக்ஸ் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments