Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் இறந்ததற்கு இரங்கல் தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி! – ப்ளூ சட்டை மாறன் நெகிழ்ச்சி!

Advertiesment
Cinema
, வெள்ளி, 8 அக்டோபர் 2021 (10:48 IST)
ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியாகவுள்ள ஆண்டி இந்தியன் பட போஸ்டருக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளதற்கு ப்ளூ சட்டை மாறன் நன்றி தெரிவித்துள்ளார்.

யூட்யூப் திரைப்பட விமர்சகர் ப்ளூசட்டை மாறன் எழுதி இயக்கியுள்ள படம் ஆண்டி இந்தியன். வழக்கமாக எந்த படம் வந்தாலும் அதை தாறுமாறாக விமர்சிக்கும் மாறனின் படம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் நேற்று இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

அதில் ப்ளூசட்டை மாறனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது போல டிசைன் செய்யப்பட்டிருந்தது. அதற்கு பலரும் விளையாட்டாக ஆன்மா சாந்தியடையட்டும் என இரங்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள மாறன் “ஆன்டி இண்டியன் - அதிகாரப்பூர்வ கண்ணீர் அஞ்சலி ஃப்ளெக்ஸ் பேனர். முந்தைய போஸ்டருக்கு RIP போட்ட அன்பர்களுக்கு மிக்க நன்றி. கொண்டாட்டங்கள் தொடரட்டும்” எனக் கூறியுள்ளதோடு இன்று மாலை 6.30 மணிக்கு ட்ரெய்லர் வெளியாவதாகவும் அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மும்பை அணி ப்ளே ஆஃப் செல்ல இந்த இரண்டே வாய்ப்புதான் இருக்கு... ஆனா நடக்குமா?