Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்டுகொள்ளாத லைகா… கைமாறுகிறதா இந்தியன் 2!

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (17:46 IST)
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படம் லைகாவிடம் இருந்து வேறு ஒரு நிறுனத்துக்கு கைமாற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது. கமலின் அரசியல், படப்பிடிப்புத் தளத்தில் விபத்து, கொரோனா லாக்டவுன் என பலத் தடங்கல்கள் வரிசையாக வந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில் இப்போது கமலோ லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இதனால் இயக்குனர் ஷங்கர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது கமல் தான் ஒரு 20 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். நடிகர் நடிகைகள் அதிகமாக இல்லாத காட்சிகளைப் படமாக்குங்கள் என ஷங்கரிடம் சொல்ல அவரும் உற்சாகமாகியுள்ளார். ஆனால் தயாரிப்பு தரப்பிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் இப்போதைக்கு இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்படுவது கஷ்டம்தான் என சொல்லப்படுகிறது.

இதனால் லைகா மேல் ஷங்கரும் கமலும் பயங்கர அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் லைகாவிடம் இருந்து அந்த படத்தை வேறு ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனத்துக்கு கைமாற்றும் வேலைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments