Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TTF வாசனின் மஞ்சள் வீரன் திரைப்படத்தில் அனிருத் குரலில் பாடல்!

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (07:43 IST)
யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக மோட்டார் பைக் ஓட்டி அதை வீடியோவாக எடுத்து போட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். அதிலும் அவர் வீடியோக்களில் வேகமாக பைக் ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் எழுந்தது.

இந்நிலையில் இப்போது அவர் நடிக்கும் மஞ்சள் வீரன் என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை செல்அம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கையில் சூலத்தோடு பைக் ஓட்டிக்கொண்டு ஆக்ரோஷமாக வாசன் இருக்கும் விதமாக இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் கடந்த ஜூன் மாதம் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் அறிமுகப் பாடலை அனிருத் குரலில் உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அதிகளவில் பரவி வருகின்றன. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

விஷால் பற்றி அவதூறு பரப்பும் ஊடக போர்வை போர்த்திய விஷம நபர்கள்! - விஷால் மக்கள் நல இயக்கம் கண்டனம்!

சென்சார் ஆனது ‘விடாமுயற்சி’ திரைப்படம்.. எப்போது ரிலீஸ்?

விடாமுயற்சி படத்தின் ‘ரன்னிங் டைம்’ பற்றி வெளியான தகவல்!

மகன் படம் ஹிட்டானால் புகைப் பிடிப்பதை விட்டுவிடுகிறேன்… அமீர்கான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments