Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பிகிலுக்கு’ முன், ‘பிகிலுக்கு பின்: விஜய்யுடனான உறவு குறித்து பிரபல நடிகர்!

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (18:50 IST)
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள ’பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை அருகே உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்கின்றனர். விஜய்யின் பெற்றோர்களாகிய எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் 
 
இந்த நிலையில் சற்று முன் ’பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடங்கியது. இந்த ஆடியோ விழாவை நடிகர் மிர்ச்சி சிவா மற்றும் தொகுப்பாளினி ரம்யா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த விழாவின் முதல் நபராக நடிகர் ஆனந்தராஜ் மேடையில் பேசியபோது, ‘பிகில்’ திரைப்படத்துக்கு முன்புவரை விஜய்யை தான் ’விஜய் அண்ணா’ என்று அழைத்து வந்ததாகவும், ஆனால் ‘பிகில்’ படப்பிடிப்பின் போது தனக்கும் அவருக்கும் மிகவும் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளதால் இனி அவரை ’நண்பன்’ என்றே அழைக்க இருப்பதாகவும் கூறினார். ஆனந்தராஜின் இந்த பேச்சை கேட்டவுடன் விஜய் ரசிகர்கள் கைதட்டல் அவருக்கு உற்சாகம் அளித்தது. 
 
வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் இந்த படத்தில் விஜய்,  நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ்,  இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலக்கும் கல்கி 2898 ஏடி.. மூன்றாவது நாளிலேயே மூச்சடைக்க செய்யும் வசூல்!

மச்சானின் காதலியை கரம்பிடித்த மாமா! காமெடி கலாட்டா! – குருவாயூர் அம்பலநடையில் OTT விமர்சனம்!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

அடுத்த கட்டுரையில்