Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட எமி ஜாக்சன்!

Advertiesment
எமி ஜாக்சன்
, வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (08:04 IST)
நடிகை எமி ஜாக்சன் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மதராசப் பட்டணம் படம் மூலம் தமிழில் அறிமுகமான எமி ஜாக்சன் தொடர்ந்து தங்க மகன், ஐ, எந்திரன் 2 ஆகிய படங்களிலும் சில பாலிவுட் படங்களிலும் நடித்தார். அதன் பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார்.தொடர்ந்து நடிப்பது குறித்து பேசிய அவர் ‘இந்தியா என்னை ஒரு நடிகையாக உருவாக்கியது. நான் என சினிமா வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடங்கள்தான் என் நிஜ வாழ்க்கையிலும் என்னை உயர்த்தின. என் குடும்ப சூழல் காரணமாக இப்போது என்னால் நடிக்க முடியவில்லை. மேலும் என் மகன் இன்னும் கொஞ்சம் வளரவேண்டும். என் அம்மாவும் கணவரும் எப்போதும் என் கூட இருக்கின்றனர். நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். 80 வயதானாலும் நான் தொடர்ந்து நடிப்பேன்.’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் அந்தாதூன் ரீமேக்கான அந்தகன் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் அவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது கவர்ச்சியான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அருள்நிதியின் அடுத்த காப் தில்லர் - வெளியானது அப்டேட்!