Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமீர்கான் கொடுத்த உதவியை வாங்க மறுத்த பொதுமக்கள்: வாங்கியவர்களுக்கு மட்டும் காத்திருந்த ஆச்சரியம்

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (09:33 IST)
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பல கோடி ஏழை எளிய மக்கள் இந்தியாவில் வறுமையில் வாடி வருவதாகவும் அவர்களுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரும் கோடிக்கணக்கில் நிதி உதவியும் பொருளுதவியும் கொடுத்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் அவர்கள் கொடுத்த பொருள் உதவி பெரும்பாலான மக்கள் வாங்கவில்லை என்றும் ஆனால் வாங்கிய பொதுமக்களுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது 
 
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர் அமீர்கான் ஏழை எளிய மக்களுக்கு ஒரே ஒரு கிலோ கோதுமை மாவை மட்டும் கொடுக்க முன்வந்தார். இந்த ஒரு கிலோ கோதுமை மாவை மட்டும் வாங்கி என்ன செய்ய என்று பெரும்பாலான பொதுமக்கள் அதனை வாங்கச் செல்லவில்லை. ஆனால் மிகவும் பசியுடன் இருக்கும் ஏழை எளிய மக்கள் மட்டும் அந்த கோதுமையை வாங்க முன்வந்தனர்
 
அமீர்கான் கொடுத்த கோதுமை மாவு பாக்கெட்டை வாங்கி வீட்டுக்கு சென்று அவர்களுக்கு அந்த பாக்கெட்டை உடைத்து பார்த்தபோது அதில் ரூபாய் 15 ஆயிரம் இருந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. தான் செய்யும் உதவி உண்மையான ஏழைகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்று நினைத்து அமீர்கான் இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாகவும் கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் பணம் இருந்த விஷயம் அந்த கோதுமை மாவை விநியோகம் செய்பவர்களுக்கு கூட தெரியாது என்றும் கூறப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சூர்யா 45’ படத்தில் இணைந்த ‘லப்பர் பந்து’ நடிகை; அதிகாரபூர்வமாக அறிவித்த ஆர்ஜே பாலாஜி..!

விடுதலையான அல்லு அர்ஜூன்! நேரில் சந்தித்த ராணா, நாக சைதன்யா! கண்ணீர் விட்ட சமந்தா!

AI டெக்னாலஜி எல்லாம் இல்ல.. ஒரிஜினல் AK தான்! - வைரலாகும் அஜித்குமார் புகைப்படம்!

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments